பிரிமியர் லீக் வீரர்கள் ஏலம் துவங்கியது

இந்தியன் பிரிமீயர் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் துவங்கியது . பெங்களூருவில் நடக்கும் ஏலத்தில் 351 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர் . தற்போதைய நிலவரப்படி அதிகபட்சமாக ஆஸி., வீரர் ஷேன் வாட்சனை – ரூ. 9.50 கோடிக்கு பெங்களூரு அணி ஏலம் எடுத்தது.மேலும் ஏலம் போன வீரர்கள் விவரம் வருமாறு:

இங்கிலாந்தை சேர்ந்த கெவின் பீட்டர்சனை 3 . 5 கோடிக்கு புனே அணி ஏலம் எடுத்தது . வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஸ்மித்- 2. 3 கோடிக்கு குஜராத் அணி ஏலம் எடுத்தது .

* ஆஸி., வீரர் ஷேன் வாட்சன் – 9.50 கோடி – பெங்களூரு அணி

* இந்திய வீரர் ஆசிஸ் நெஹ்ரா – 5 . 50கோடி – ஐதராபாத் அணி

* இந்திய வீரர் யுவராஜ்சிங் – ரூ. 7 கோடி – ஐதராபாத் அணி

* இந்திய வீரர் இசாந்த் சர்மா – ரூ. 3. 80கோடி – புனே அணி .

* தென் ஆப்ரிக்க வீரர் டாலே சின் – ரூ . 2. 3 கோடி – குஜராத் அணி

நியூஸிலாந்து வீரர் கப்டில், ஆஸி., வீரர் பின்ச் ஆகியோர் ஏலம் போகவில்லை. தொடர்ந்து ஏலம் நடந்து வருகிறது . முழு விவரம் இன்னும் சற்று நேரத்தில் வெளி வரும்

Related Posts