பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் பயங்கரவாத தாக்குதல்! ஐவர் பலி!

பிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் பயங்கரவாத தாக்குதலாக இருக்கக்ககூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

லண்டணில் அமைந்துள்ள நாடாளுமன்ற வளாகத்திலே நேற்றைய தினம் இந்த தாக்குதல் நடத்ப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பொலிஸ் அதிகாரி மற்றும் பெண்னொருவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதலையடுத்து பிரித்தானியா முழுவதும் பாதுகாப்புக்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் தாக்குதலைத் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சாம்பல் நிற ஹுயுன்டாய் ஐ40 ரக காரில் வெஸ்ட்மின்ஸ்ரர் பாலத்தினை கடந்து தாக்குதல் நடத்தும் நோக்கில் பயங்கரவாத சந்தேக நபர் வந்தபோது பொலிஸ் அதிகாரி குறித்த காரினை தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதன்போதே தாக்குதல்தாரி கத்தியினால் பொலிஸ் அதிகாரியை தாக்கியுள்ளார்.

எச்சரிக்கையடைந்த பொலிசார் தாக்குதல்தாரியை நோக்கி துப்பாக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து குறித்த கார் வேகமாக செலுத்தப்பட்டு அங்கிருந்த தடுப்புச் சுவரில் மோதச் செய்யப்பட்டதாகவும் அதற்கு முன் அந்த கார் நான்கு அல்லது ஐந்து பாதசாரிகள் மீது ஏற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தாக்குதல்தாரி உட்பட காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்திலிருந்த பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவில் இடம்பெற்ற சம்பத்தினால் அங்கு பதற்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் பயங்கரவாத நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பிரித்தானிய பொலசார், இது தொடர்பிலான மெலதிக விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts