‘100-day cough‘எனப்படும் புதிய பக்றீரியாத் தொற்றானது பிரித்தானியா முழுவதும் தீவிரமாகப் பரவிவருவதாக சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விஞ்ஞான ரீதியாக கக்குவான் என அழைக்கப்படும் குறித்த தொற்றானது போர்ட்டெல்லா பெர்டுசிஸ் என்ற பக்றீரியாவால் காற்றுவழியாக பரவுவதாகவும், இத்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப அறிகுறிகளாக சளி, காய்ச்சல் மற்றும் லேசான இருமல் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொற்றுக் காரணமாக Whooping cough எனப்படும் தொடர்சியான இருமல் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, சுமார் 100 நாட்கள் அல்லது 10 வாரங்கள் வரை இந்த தொடர்சியான இருமல் காணப்படும் எனவும், நோய் பாதிப்பு தீவிரமடையும் வாந்தி, சோர்வு, மற்றும் போது விலா எலும்புகள் உடையும் அளவு வலி ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து வரும் நிலையில் பிரித்தானிய மக்களை அவதானமாக இருக்குமாறும், முகக் கவசங்களைப் பயன்படுத்துமாறும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.