பிரித்தானியாவே பிரபாகரனின் குரு – ஜனாதிபதி

மனித உரிமைகள் பற்றி பெரிதாகக் கதைத்துக்கொண்டிருக்கும் பிரித்தானியா, தான் செய்த மனித உரிமை மீறல்களை மறந்துவிட்டது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

வலப்பனை, கல்இந்திபெத்தே பகுதியில் அமைந்துள்ள கற்குகையொன்றுக்குள் சிங்களவர்கள் 16பேரை உயிருடன் அடைத்து கற்பாறைகளாலான கதவுகளால் மூடிய பிரித்தானியாவின் நடவடிக்கையை ஜனாதிபதி இதன்போது ஞாபகப்படுத்தினார்.

வலப்பனை சத்தானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எதிரிகளை உயிருடன் கொல்லும் மனித உரிமை நியாயத்தை பிரித்தானியாவே பிரபாகரனுக்கு கற்பித்தது. அன்று பிரித்தானியா செய்த மனிதப் படுகொலைகளை இன்று மறந்துவிட்டு பேசுகிறது என்று ஜனாதிபதி மேலும் கூட்டிக்காட்டினார்.

Related Posts