பிரித்தானியாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மற்றுமொருவர் உயிரிழப்பு!!

லண்டனில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம், மீசாலை மேற்கை பிறப்பிடமாகக் கொண்ட 42 வயதான குடும்பஸ்தர் ஒருவரே நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றுக்கான ஆரம்ப நிலை அறிகுறிகள் தென்பட்டதன் அடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, லண்டனில் வசித்துவந்த இலங்கையரான மஹரகம பகுதியைச் சேர்ந்த 55 வயதான லக்‌ஷான் விஜேரத்ன என்பவர் லண்டனின் ஃபெல்தம் பகுதியில் உயிரிழந்தார்.

இதனை அடுத்து இங்கிலாந்தில் ஓய்வுபெற்ற 70 வயதுடைய ஹென்றி ஜயவர்தன என்ற ஓய்வுபெற்ற வைத்தியர் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்திருந்தார்.

இங்கிலாந்தில் 3 மரணங்களும் சுவிற்சர்லாந்தில் ஒரு மரணமும் பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியிலிருந்து சுவிற்சர்லாந்திற்கு குடிபெயர்ந்த 59 வயதான நபரே இவ்வாறு கொரோனா வைரஸ் காரணமாக சுவிற்சர்லாந்தில் உயிரிழந்த முதலாவது இலங்கையர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts