பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியவருக்கு புதிய வகை கொரோனா அடையாளம்

பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வந்த ஒருவர் புதிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிரித்தானியா மற்றும் பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு காணப்படுவதாக தொற்றுநோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேராசிரியர் நீலிக மாளவிகே மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழக ஆய்வு குழு இதனை உறுதி செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா புதிய மாறுபாடு பிரித்தானியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, இலங்கை அதிகாரிகள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருந்ததாக அறிவித்தனர்.

அதன் ஒரு பகுதியாக பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் இங்கிலாந்து விமானங்களுக்கு தற்காலிக தடை விக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts