மூன்று நாள் பயணமாக நேற்று இலங்கை வந்தடைந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோறே ஸ்வைர் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார்.
யாழ்பாணம் வந்தடைந்த பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்துக்குச் சென்று முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அத்துடன் இங்குள்ள நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
அவருடன் இலங்கைக்கான பிரிட்டன் தூதர் ஜோன்ரன்கினும் கூட வந்திருந்தார்.
இங்குள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் பிரிட்டிஷ் கல்லூரிக்குச் சென்று ஆங்கில மொழி கற்கைகள் குறித்தும் அவர் ஆராய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.