பிரான் பற்று காளி அம்மன் கோவிலில் வருடாந்த வேள்வி

வலி.மேற்கு பிரதேசத்திலுள்ள பிரான்பற்று, காளிஅம்மன் ஆலய வருடாந்த வேள்வி இன்று சனிக்கிழமை காலை நடைபெற்றது.

இதன்போது சுகாதார விதிமுறைகள், சட்டதிட்டங்களுக்கு அமைவாக சம்பந்தப்பட்டோர் முன்னிலையில் ஆலய வீதியில் இதற்கென அமைக்கப்பட்ட கொல்களத்தில் 113 ஆடுகள் பலியிடப்பட்டன.

சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக கடாக்களை வெட்டும் மூவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதேபோன்று வெட்டப்படும் கடாக்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இன்று காலை கொல்களத்துக்கு கொண்டுவரப்பட்ட கடாக்கள் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன.

பரிசோதனைக்கு உட்படுத்தப்படாத கடாக்களை வெட்ட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் 80க்கு மேற்பட்ட கடாக்கள் திருப்பிக்கொண்டுசெல்லப்பட்டன. இதன்போது பொலிஸாரும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

Related Posts