பிரான்ஸில் நடத்தப்பட்டுள்ள பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அந்த தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை குறித்த தாக்குதலில் இலங்கையர்கள் எவராவது உயிரிழந்து அல்லது காயமடைந்து இருக்கின்றார்களா என்பது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பிரான்ஸிலுள்ள இலங்கை தூதுவராலயம் தகவல்களை சேகரித்து வருவதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மஹேசினி கொலொன்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.