பிராந்திய விமான நிலையமாக பலாலியை மாற்றுவதில் இந்தியா தீவிர

பலாலி விமானத்தளத்தை பிராந்திய விமான நிலையமாக பயன்படுத்துவது தொடர்பில் களஆய்வை இந்தியா மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலாலி விமானத்தளம் பொதுமக்கள் மற்றும் இராணுவத்தின் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பலாலி விமானத்தளத்தை அபிவிருத்தி செய்வதற்கான களஆய்வுகளை இந்திய விமான நிலைய அதிகார சபை மேற்கொண்டு வருவதாக இலங்கை சிவில் விமானசேவை அதிகாரசபையின் பணிப்பாளர் எம்.எம்.சி.நிமல்ஸ்ரீ குறிப்பிட்டுள்ளார்.

விமான நிலையத்தின் ஓடுபாதை 1000 மீற்றரில் இருந்து 2300 மீற்றராக விஸ்தரிக்கப்பட கடந்த மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஒத்துழைப்புக்களை இந்திய அரசாங்கம் வழங்கியிருந்தது.

இந்திய விமான நிலைய அதிகார சபை களஆய்வு தொடர்பான அறிக்கையை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்க விரைவில் வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Posts