பிரபுவை நேரில் வாழ்த்திய ரஜினி!

பிரபுவின் 60 வது பிறந்த நாளையொட்டி ரஜினி நேரில் சென்று அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகனும், நடிகருமான பிரபுவுக்கு வருகிற டிசம்பர் 27 ஆம் திகதி பிறந்தநாள். இந்த பிறந்தநாளோடு அவருக்கு 60 வயது ஆகிறது. இந்நிலையில், பிரபுவின் பிறந்தநாளையொட்டி நேற்று பிரபுவை அவரது அன்னை இல்லத்தில் ரஜினி நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

ரஜினி நேரில் வாழ்த்தியது பிரபுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இந்த சந்திப்பின் போது, நடிகர் விக்ரம் பிரபு மற்றும் பிரபு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உடனிருந்தனர். ரஜினியும் பிரபுவும் ‘குரு சிஷ்யன்’, ‘தர்மத்தின் தலைவன்’, ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

சினிமாவையும் தாண்டி, ரஜினியும், பிரபுவும் நிஜ வாழ்க்கையிலும் உடன்பிறவா சகோதரர்களாக இருந்து வருகின்றனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இருப்பினும், தன்னுடைய பிறந்தநாளையொட்டி ரஜினி நேரில் வந்து வாழ்த்தியது பிரபுவை அவரது குடும்பத்தாரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts