பிரபுவுக்கு ஜோடியான கமலின் நாயகி பூஜாகுமார்!

முரளி நடித்த காதல் ரோஜாவே படத்தில் அறிமுகமானவர் பூஜாகுமார். அதன்பிறகு ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த பூஜா குமாரை, விஸ்வரூபம் படத்திற்காக கோலிவுட்டுக்கு அழைத்து வந்தவர் கமல். அந்த வகையில், அதே படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமலுக்கு ஜோடியாக நடித்த பூஜாகுமார், பின்னர் உத்தமவில்லன் படத்தில் நடித்தார். அதையடுத்து கமல் படங்களில் அவர் இடம்பெறவில்லை.

pirabu

ஆனபோதும், வசந்த் இயக்கி வரும் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மீன்குழம்பும் மண்பானையும் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் பூஜாகுமார். இதில் மீன்குழம்பும் மண்பானையும் படத்தில் நாயகனாக நடிக்கும் காளிதாஸ் ஜெயராமின் அப்பாவாக பிரபு நடித்துள்ளார்.அவரது ஜோடியாக பூஜாகுமார் நடித்திருக்கிறார். அந்த வகையில், காளிதாஸ் தனது காதலி ஆஷ்னா சாவேரியுடன் டூயட் பாடும்போது, பிரபுவும் தனது இளமை காலத்துக்கு சென்று பூஜாகுமாருடன் டூயட் பாடும் காட்சிகளும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளதாம். மலேசியாவில் இயங்கி வரும் தமிழ் ஹோட்டல் சம்பந்தப்பட்ட இந்த கதையில் மலேசிய பெண்கள் அணிவது போன்ற காஸ்டியூமில் செம கலக்கலாக பூஜாகுமாரை காண்பித்துள்ளாராம் இயக்குனர்.

Related Posts