பிரபுதேவா தயாரிப்பது நயன்தாராவின் கதையா?

மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த பிறகு முதலில் சிம்பு, பிறகு பிரபுவோ ஆகியோரை காதலித்தவர் இப்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலிப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் முந்தைய காதல்கதையில் திருமணம்வரை சென்றது பிரபுதேவா உடன்தான்.

அவருக்காக இந்துவாக மதம் மாறினார் நயன்தாரா. பிரபுதேவாவோ நயன்தாராவுக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்தார். இத்தனை தியாகங்களுக்குப் பிறகும் நயன்தாரா – பிரபுதேவா காதல் ஒருகட்டத்தில் முறிந்துபோனது. காலப்போக்கில் இதை நாம் எல்லாம் மறந்துவிட்டாலும் பாதிக்கப்பட்ட பிரபுதேவா மறக்கவில்லை. அதை தன் சகாக்களிடமும் அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், தற்போது பிரபுதேவா தயாரிப்பில், இயக்குநர் ஏ.எல்.விஜய் ஒரு படத்தை தயாரிக்கிறார். இதில் தமன்னா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் கதை நயன்தாராவின் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்ட கதை என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிற இப்படத்திற்கு, தமிழில் ‘காந்தா’ என்று தலைப்பு வைத்துள்ளனர். தெலுங்கில் ‘அபினேற்றி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அபினேற்றி என்றால் நடிகை என்று அர்த்தமாம். காந்தா என்ற தலைப்பு ரத்தக்கண்ணீர் படத்தில் எம்.ராதாவிடம் பணத்தைப் பறித்துவிட்டு அவரை உதறிசெல்லும் கதாபாத்திரத்தின் பெயர் என்பதை நினைவில் கொள்க.

Related Posts