பிரபா எம்பியுடன் கூட்டமைப்பு எம்பிக்கள் சந்திப்பு

tnaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பு ஜனநாயக மக்கள் காங்கிரஸ் பம்பலபிட்டி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது 13ம் சட்டத் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

13ம் சட்டத் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றில் அனைத்து தமிழ் கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டும் என்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சந்திப்பில் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பேராசிரியர் சர்வேஸ்வரன் ஆகியோரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் பிரபா கணேசன், பொதுச் செயலாளர் கலாநிதி சுரேஷ் கங்காதரன், பிரதித் தலைவர் பி.வை.பிரசாத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related Posts