தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையின் மூலப் பிரதியை காணவில்லை என திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
2002Mம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22ம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அப்போதைய பிரதமர் ரணிலுக்கும் இடையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
அத்துடன் குறித்த கைச்சாத்து மூலப்பிரதி அரசாங்கத்தின் சமாதான செயலகத்தில் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்தது. எனினும் ஆவணத்தில் காணப்படும் மெய்யான விடயங்கள் அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினால் ஆவணம் தொலைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, போர் நிறுத்த உடன்படிக்கை எந்தவொரு இராணுவ தலைவருக்கும் காண்பிக்கப்படவில்லை.
மேலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் போர் நிறுத்த உடன்படிக்கைகையை ஒரு தலைப்பட்சமாக இரத்து செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.