பிரபாகரன் சரணடைந்திருந்தால் மஹிந்தவின் குடும்பத்துடன் இருந்திருப்பார் – சரத்பொன்சேகா

sarath-ponsekaஇராணுவத்திடம் பிரபாகரன் சரணடைந்திருந்தால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்துடன் இருந்திருப்பார்’ என்று முன்னாள் இராணுவத்தளபதியும் புதிய ஜனநாயக் கட்சியின் செயலாளர் நாயகமுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர்,

‘யுத்தம் நடைபெற்ற காலத்தில் சிரேஷ்ட தலைவர்கள் எவரும் சரணைடையவில்லை. சரணடைந்தவர்கள் இப்போது ராஜபக்ஷ குடும்பத்துடன் இருக்கின்றார்கள். குறிப்பாக கே.பி மற்றும் தயாமாஸ்டர் போன்றவர்கள் இப்போது மஹிந்தவின் குடும்பத்துடன்தான் இருக்கின்றனர்.

பிரபாகரன் சரணடைந்தாலும் மகிந்தவின் குடும்பத்துடன் இருந்திருப்பார். அத்தோடு அவர் முதலமைச்சர் பதவியும் வகித்திருப்பார்’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“யாழ். கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க ஊழலுக்கு துணைபோகின்றார்”

‘யாழ்.மாவட்டத்தில் உள்ள இராணுவ கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க ஊழலுக்கு துணைபோகின்றார்’ என்றும் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பில் தொடர்;ந்தும் உரையாற்றிய அவர்,

யாழ்.கட்டளைத்தளபதி ஊழலுக்கு துணைபோவது மட்டுமல்லாது, இராணுவ சிப்பாய்கள் 4 முதல் 5 பேர் வரையானோரை கைக்கூலிகளாக வைத்து, அரசிற்கு சர்பாக சுயேட்சையாக வடமாகாண சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான பிரசார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

அத்துடன், அரசுக்கு எதிரானவர்களின் சுவரொட்டிகளை கிழித்து வருகின்றார்.

இதேவேளை, விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகளிடம் 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்கின்றார் என பொலிஸ் மா அதிபர் (ஐ.ஜி.பி) என்னிடம் தெரிவித்துள்ளர்.

அந்தவகையில், இவ்வாறு ஊழல் பேர்வழியான இராணுவ கட்டளைத் தளபதிகளினால், எமது கடமைகளை சரியாக செய்ய முடியாது.

இராணுவத்தில் 95 வீதமானவர்கள் நேர்மையானவர்கள் இருக்கின்றார்கள். அதில் 5 வீதமான இராணுவ சிப்பாய்களை தமது கைக்கூலிகளாக பயன்படுத்தி தவறான வழிமுறைகளை கையாள்கின்றார்கள்’ என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related Posts