பிரபாகரன் குறித்த விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை பிரதமர் ஏற்றுக் கொள்வாரா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், இன்று அவர் பிரதமராகியிருப்பார் என்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் இனவாதக் கருத்தை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்வாரா என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று ஊடகவியலாளர்களிடம் கருத்து வௌியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
விஜயகலா மகேஸ்வரன் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர். ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினரின் கருத்தை ஏற்றுக் கொள்வாரா?
அது ஐக்கிய தேசிய கட்சியின் உத்தியோகபூர்வ கருத்தா? அல்லது வடக்கிற்கு ஒரு கருத்தையும் தெற்கில் இன்னொரு கருத்தையும் கொண்டிருப்பது தான் ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.