பிரபாகரன் ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன்! : கிளிநொச்சியில் பாரதிராஜா

நிகழ்காலத்தில் வாழ்ந்த ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன் யாழ். மண்ணில் பிறந்தான். அவன் தமிழர்களுக்கு ஓர் அடையாளத்தினை சொல்லிவிட்டுச் சென்றான் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், இது ஓர் தனி ஈழமான பிறந்திருக்க வேண்டியதற்காக போராடிய ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க மிகப்பெரிய தலைவனோடு சில நாட்கள் நான் இந்த மண்ணில் தங்கியிருந்தேன்.

அந்த உணர்வு பூர்வமான விடயமே இன்றைக்கும் நான் ஈழத்தமிழர்களோடு பிணைந்திருப்பதற்கான முக்கிய காரணம். இதனை பற்றி வரலாறுகள் தெளிவாக பேசும்.

இப்போது நான் அதனை கூறினால் பிழையான கருத்தாக மாறிவிடும் காரணம் இன்றைய சூழ்நிலைகள் மாறிப்போய்விட்டன எனவும் பாரதிராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts