பிரபாகரன் உயிரோடு உள்ளார்!! ஈழப்போர் மீண்டும் வெடிக்கும் – பழ.நெடுமாறன் பரபரப்பு தகவல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய் எனவும், பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஈழப்போர் தொடங்கும் என்றும் தமிழர் தேசிய இயக்க நிறுவனத் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

prabhakaran-nedumaran

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன் இந்த பரபரப்பு தகவலை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியாதாவது:

அத்திக்கடவு அவினாசி திட்ட பிரச்சினையில் பவானி ஆற்றில் உற்பத்தியாகும் நீர் 30 டி.எம்.சி. வீணாக கடலில் கலக்கிறது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் வறண்டு போய் விட்டன.நிலத்தடி நீரும் 1000 அடி வரை வறண்டு விட்டன. அவினாசி திட்டதை நிறைவேற்றினால் 50 அடி ஆழத்தில் நீர் கிடைக்கும். 500 கிலோ வாட் மின்சாரமும் நமக்கு கிடைக்கும். காமராஜர் ஆட்சிக்காலத்தில் ரூ.120 கோடியில் இந்த திட்டம் தயாரிக்கப்பட்டது.

அதன்பின்னர் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சிகள் மாறிமாறி ஆட்சி செய்த போது இத்திட்டத்தை கைவிட்டது. தற்போது இத்திட்டத்தை நிறைவேற்ற பல ஆயிரம் கோடி தேவைப்படும் என்று கூறுகிறார்கள். அவினாசி அத்திக்கடவு திட்டதை எந்த அரசு வந்தாலும் குறிப்பிட்ட காலக்கெடுவில் நிறைவேற்ற வாக்குறுதி அளிக்க வேண்டும்.

இந்திய அரசு பிரபாகரன் இறந்து விட்டதாக இன்றும் அறிவிக்கவில்லை. பிரபாகரன் இறந்து விட்டதாக அறிவித்த அறிவிப்பு பொய்யாகும். பிரபாகரன் உயிருடன் உள்ளார். மீண்டும் ஈழப்போர் தொடங்கும்.

கடந்த 2009ம் ஆண்டில் இலங்கையில் ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு காங்கிரஸ் கட்சியும், அதனுடன் கூட்டணி வைத்திருந்த திமுகவும் காரணமாக இருந்தன. இதன் காரணமாகவே 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் அந்தக் கட்சிகள் படுதோல்வி அடைந்தன. இப்போது அவர்கள் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளனர்.

இனப் படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படாத நிலையில், ராஜபட்சவுக்கு பிறகு பதவிக்கு வந்துள்ள சிறீசேனா ஆட்சியிலும் மக்களின் இன்னல்கள் தொடருகின்றன. திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கும், ஈழப் பிரச்னையைப் புறக்கணிப்பவர்களுக்கும் வரும் தேர்தலிலும் மக்கள் தண்டனை வழங்குவார்கள். இவ்வாறு பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

Related Posts