பிரபாகரனை பொதுத் தேர்தலில் களமிறக்கின்றார் முத்தையா முரளிதரன்!!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் சகோதரர் முத்தையா பிரபாகரன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளார்.

அவர் நுவரெலியா மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியே எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் முத்தையா முரளிதரன் குறிப்பிட்டள்ளார்.

இதேவேளை தான் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடப்போவதாக சமூக வளைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது என்றும் முத்தையா முரளிதரன் இதன்போது கூறியுள்ளார்.

புதிய அரசாங்கத்தால் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாமல் போயுள்ளமை வருத்தத்துக்குரியது என்றும் எனவே மலையக மக்களுக்காக தனது சகோதரர் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதாகவும் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Related Posts