பிரபாகரனை புகழ்ந்து ஸ்ரீதரன் எம்.பி நாடாளுமன்றில் உரை

Sritharanதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பெருமைப்படுத்தியும் அதீதமாக புகழ்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் நாடாளுமன்றில் ஓர் அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றினார்.

பிரபாகரனின் பிறந்த நாள் இன்றாகும், நாடாளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன் தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியத்தை நியாயப்படுத்தியும் மறைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களையும் போராளிகளையும் மாவீரர் தினத்தில் நினைவுகூர வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் பேசினார்.

இவரது உரையை அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டித்தனர். பிரபாகரன் தமிழ்,சிங்கள இனத் தலைவர்கள் பலர் கொலை செய்யப்பட காரணமாக இருந்தாரென உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க பதிலடி கொடுத்தார்.

யுத்தக் குற்றம் நடந்தது என குற்றம் சாட்டி இலங்கை மீது பாய காத்திருக்கும் சர்வதேசச் சக்திகளுக்கு தீனிபோடவே ஸ்ரீதரன் இந்த அறிக்கையை தயாரித்தாரென அமைச்சர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் அறிக்கையை அடுத்து எதிர்த்தவர் தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கினைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆவர்.

இந்நிலையில் இந்த உரையை ஹன்சாட்டிலிருந்து அழித்துவடும்படி குழுக்களின் பிரதி தலைவர் முருகேசு சந்திரகுமார் பணித்தார்.

Related Posts