தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவு கூர்ந்தமைக்காக மட்டக்களப்பு கல்குடா பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் எந்த உறுப்பினர்களையும் நினைவுகூருவதற்கு மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபாகரனின் மரணத்தை நினைவுகூரும் நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக 38 வயது ஒருவரை கல்குடா பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.