தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் உருவாக்கப்பட்ட இந்த கட்சியில் அவரது வழிகாட்டலிலும் விடுதலைப் புலிகளின் காலத்தின் நீட்சியாக என்னுடைய பயணத்தை எனது மக்களின் உரிமைக் காகவும் தன்னாட்சிக்காகவும் பாடுபட்டு தொடர்ந்தும் செயற்படுவேன் என யாழ்.தேர்தல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ள சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற எட்டாவது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியத்தின்பால் ஈர்ப்பும் பற்றும் கொண்ட தமிழ் மக்கள், தங்களின் விருப்பு வாக்குகளை எங்களின் கட்சியின் பெயராலே எனக்கு தந்திருக்கின்றார்கள். இந்த விருப்பு வாக்குகள் எனக்கு கிடைத்த தாக நான் கருதவில்லை. இது கட்சிக்கு கிடைத்த வாக்காகவும் மக்கள் தங்களின் விருப்பங்களை தந்திருக்கின்ற காரணத்தினாலும், தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமைக் கான சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர் வினை பெற்றுக்கொள்வதற்கு தமிழீழ விடு தலைப்புலிகளின் காலத்தில் இருந்து தமிழர்கள் எப்படி போராடி வந்தார்களோ அந்த போராட்ட மற்றும் தமிழ்த் தேசிய உணர்வோடு தேசிய தலைவருடைய வழிகாட்டலில் என்னுடைய பயணத்தை தொடர்ந்து மக்களுக்காகவும் என் தேசத்துக்காகவும் எனது பணியை ஆற்றுவதற்கு நான் மிகக்கூடிய அளவு பிரயத்தனப்பட்டுள்ளேன் என அவர் தெரிவித்தார்.