பிரபாகரனின் உருவப்படத்துடன் புதுவருட வாழ்த்து தெரிவித்த இருவருக்கு விளக்கமறியல்!!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப் புலிகளின் இலட்சனையை பயன்படுத்திய இருவரை 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் மற்றும் விடுதலைப்புலிகளின் இலச்சினை ஊடாக முகநூலில் புதுவருட வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் இரத்தினபுரியை சேர்ந்த தினேஸ்குமார் மற்றும் விதுஸன் என்ற இருவரும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம்ந தொடர்பிலான வழக்கு விசாரணையானது கொழும்பு மேலதிக நீதிவான் லக்மாலி ஜயதுங்க முன்னிலையில் நேற்று (புதன்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த இருவர் தொடர்பிலும் மேலதிக நடவடிக்கைகள் சட்ட மா அதிபரின் ஆலோசனையின் கீழ் இடம்பெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts