பிரபாகரனின் அரசியலில் ஜனநாயகத் தன்மை இருந்தது: சிவஞானம்

ஜனநாயக அரசியலில் ஒருபகுதியையும் செய்ய வேண்டுமென்பதில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உறுதியாக இருந்தார் என வடக்கு மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய காலத்திலேயே பிரச்சினையை தீர்த்துவிட வேண்டுமென்றும் ஒரு சமாந்தரமான முடிவொன்று எட்டப்பட வேண்டும் என்றும் அவர் தன்னிடம் கூறியிருந்ததாக சிவஞானம் மேலும் தெரிவித்தார்.

இந்திய பத்திரிகையாளர் தி.ராமகிருஷ்ணனின் ‘ஓர் இனப்பிரச்சினையும், ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூல் அறிமுக விழா யாழ். முகாமையாளர் சங்கத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

இவ்வாறு ஜனநாயக அரசியல் சிந்தனை பிரபாகரனிடம் இருந்ததாகவும், அதன் பிரகாரமே ஆர்.பிரேமதாசவிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தன்னை அனுப்பியதாகவும் சிவஞானம் குறிப்பிட்டார்.

மேலும், தோளில் துண்டு போடும் விடயம் குறித்து கருத்துத் தெரிவித்த சிவஞானம், வீரம் செறிந்த அரசியல்வாதியாகவே துண்டுபோடுவேன் என்று பிரபாகரன் தன்னிடம் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழர்களின் உரிமையை உறுதிப்படுத்தும் கடப்பாடு இந்தியாவுக்கு உண்டு என்றும் சிவஞானம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts