பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார்

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்த பிரபல நடிகர் வினுசக்கரவர்த்தி உடல்நலக்குறைவால் சென்னையில் நேற்று காலமானார்.

திரைத்துறையில் கதை, வசனகர்த்தாவாக அறிமுகமாகி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக வலம் வந்தவர் வினு சக்கரவர்த்தி.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, போன்ற மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பெரும்பாலும் நகைச்சுவை, குணசித்திர, வில்லன் வேடங்களிலேயே நடித்துள்ளார். குறிப்பாக தமிழில்தான் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், 74 வயதான நடிகர் வினு சக்கரவர்த்தி கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது மனைவி பெயர் கர்ணப்பூ. மறைந்த வினுசக்கரவர்த்திக்கு சரவணன், சண்முகப்பிரியா என்கிற மகன், மகள் உள்ளனர்.

அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது.

Related Posts