பிரபல நடிகர் விஜயகாந்த் காலமானார்!!

பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயகாந்த் இன்று வியாழக்கிழமை (28) காலை காலமாகியுள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளதாக வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் அதன்பிறகு அவர் தேமுதிக கட்சியை ஆரம்பித்து அரசியலில் நுழைந்தார். எம்எல்ஏவாகவும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் வெற்றிகரமாக செயல்பட்டார்.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான விஜயகாந்த் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தற்போது சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டின் முன்பு தொண்டர்கள் குவித்து வரும் நிலையில், அப்பகுதியில் பொலிஸ் பாதிகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related Posts