பிரபல நடிகரை மறைமுகமாக கலாய்த்த சிம்பு!

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியான இந்தத்திரைப்படம் சென்னையில் இந்த வருடம் வெளியான திரைப்படங்களில் அதிக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் வசூலில் மூன்றாவது திரைப்படம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றி குறித்து சிம்பு டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மோசமான ஃபிளாப் படங்களை எல்லாம் பிளாக் பஸ்டர் என்றால், அச்சம் என்பது மடமையடா படத்தை என்னவென்று சொல்வது என்று டுவிட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இவர் மறைமுகமாக கடவுள் இருக்கான் குமாரு படத்தையும், ஜி.வி.பிரகாஷ் குறித்து தான் டுவீட் செய்துள்ளார் என்று ரசிகர்கள் கிசுகிசுக்கின்றனர்.

Related Posts