உணவுப் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் எம்.எஸ்.ஜீ எனும் சுவையூட்டியை இன்னும் இரு வாரங்களுக்குள் சந்தைகளில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் அறிவுரைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
குறித்த சுவையூட்டி களைநாசினியாக பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது என பாலித மஹிபால இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி உணவு ஆலோசனை சபையின் பரிந்துரையின் அடிப்படையில் சோடியம் குளுமேட் எனப்படும் எம்.எஸ்.ஜீ சுவையூட்டியை சந்தையில் இருந்து அகற்ற முடிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்