பிரபல கிரிக்கெட் வீரரை கவர்ந்த கபாலி

பிரபல ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர் இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி தமிழ் கிரிக்கெட் ரசிகர்களிடையே பிரபலமானார்.

mathew-hayden

இந்நிலையில், ஐபிஎல்-க்கு இணையாக தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் நடத்தும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை பிரபலப்படுத்துவதற்காக சமீபத்தில் சென்னை வந்தார் ஹைடன். சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பின்னர், மதுரைக்கு சென்று மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு குத்தாட்டமும் ஆடினார். இந்நிலையில், மீண்டும் சென்னைக்கு திரும்பிய ஹைடன், ஆல்பர்ட் திரையரங்கில் ‘கபாலி’ படம் பார்த்து ரசித்தார். ‘கபாலி’ படத்தை பார்த்த அவர் படம் ரொம்பவும் கவர்ந்ததாகவும், ரஜினியின் ஸ்டைல் அனைத்தும் பிரம்மிப்பாக இருந்ததாகவும் கூறினார். ரஜினி ஸ்டைலில் தனது கூலிங் கிளாஸை போட்டு காண்பித்தும் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இதில், தென்சென்னை, மதுரை, காரைக்குடி, தூத்துக்குடி உள்ளிட்ட 8 அணிகள் மோதுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts