ஹலோ பிரபா ஒயின்ஸ் ஆப் ஓனர் இருக்காரா? என்று வடிவேலு கேட்கும் காமெடி காட்சியை யாரும் இன்றும் மறந்திருக்க முடியாது. இந்த காட்சியில் மட்டுமில்லாமல் பல படங்களில் வடிவேலுவுடன் காமெடி காட்சிகளில் நடித்தவர் செல்லத்துரை.
இவர் உடல் நிலை சரியில்லாமல் காலமானார். இவரின் வயது 74. சில நாட்களாகவே சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். செல்லத்துரை மறைவிற்கு சினி உலகம் ஆழ்ந்த வருத்தங்களை பதிவு செய்கிறது.