கிளிநொச்சி மாவட்டத்தின் இரு பிரதேச செயலாளர்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் கண்டாவளைக்கும், கண்டாவளை பிரதேச செயலாளர் த.முகுந்தன் கரைச்சிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சேவைக் காலத்தைக் கருத்திற்கொண்டு, பொதுச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைவாக உள்வாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.