பிரதேச அபிவிருத்தியை கருத்தில் கொண்டு சரியான வேட்பாளர்களை தெரிவு செய்யவும் – அங்கஜன்

1241263_560067344042913_1342551288_nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியின் வடமாகாண சபைத் தேர்தல் வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதனின் மக்கள் சந்திப்பு ஒன்று சிறுப்பிட்டியில் இடம்பெற்றது. சிறுப்பிட்டி ஜனசக்தி கிராமத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சுற்றாடல்துறை அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்தவும், சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் ரெஜினோல்ட் குரேயும் கலந்து கொண்டிருந்தனர்.

972705_560067230709591_1289481041_n

சிறுப்பிட்டி ஜனசக்தி கிராம மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இச்சந்திப்பில் கூடியிருந்த பெருந்தொகையான மக்கள் மத்தியில் உரையாற்றிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்ணணியின் வடமாகாண சபைத் தேர்தல் வேட்பாளருமாகிய அங்கஜன் இராமநாதன்,

நான் இந்த இடத்தில் உங்களை சந்திப்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைகின்றேன். ஏனெனில் உங்கள் பகுதிக்கு இரண்டு அமைச்சர்களை ஒரே நேரத்தில் அழைத்து வந்திருக்கின்றேன். ஊங்கள் பிரச்சனைகளை அவர்களிடத்தில் நீங்களே சொல்வதற்கு சந்தர்ப்பம் ஒன்றை அமைத்து தந்திருக்கின்றேன்.

1079940_560067000709614_1296661262_n

நாங்கள் யாழ்ப்பாணத்தில் நிறையவற்றைக் கட்டியெழுப்ப வேண்டியவர்களாக இருக்கின்றோம்.விவசாயம், மீன்பிடி, கல்வி, இளைஞர்கள் என்கின்ற நான்கு விடயங்களும் யாழ்ப்பாணத்தின் முதுகெலும்புகள். மீண்டும் யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்புவதற்கு இந்த நான்கு விடயங்களிலும் முழுமையான அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும்.

இவற்றோடு எமது பிரதேச அபிவிருத்தையும் மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதுவரை காலமும் நாங்கள் பிடிவாதக்காரர்களாக இருந்து விட்டோம். கண்ணையும் காதையும் வாயையும் மூடிக்கொண்டு எமக்கு வருகின்ற பிரதேச அபிவிருத்திகள் எதுவும் வேண்டாம். எமது மக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் வேண்டாம் என இருந்து விட்டோம். இப்படியே இனியும் இருந்து விட்டால் பாதிக்கப்படப் போவது எமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமே. எனவே இப்போது நாம் எடுக்கப் போகும் பாதையிலேயே இருக்கின்றது அவர்களுக்கான நல்லதொரு எதிர்காலத்தின் தெரிவு.

இந்த மாகாண சபைத் தேர்தல் களத்தில் நிற்கும் சிலர் உரிமைகள், சுயநிர்ணயம் என பலவற்றை பேசுகின்றனர். உண்மையில் இது அபிவிருத்திகளை மட்டுமே செய்யக்கூடிய மாகாணசபைக் கட்டமைப்புக்கான தேர்தலே இது. எனவே எமது பிரதேச அபிவிருத்தியை கருத்தில் கொண்டு சரியான வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு உங்கள் எல்லோரிடமும் உள்ளது.

கடந்த 2011 பிரதேச சபை தேர்தலில் நீங்கள் தெரிவு செய்து அனுப்பி வைத்த பிரதேச சபை ஆளும் கட்சி உறுப்பினர்கள் என்ன செய்தார்கள்? எங்கள் வீடுகள் அப்படியேதான் இருக்கின்றன, வீதிகள் குன்றும் குழியுமாகத்தான் இருக்கின்றன, சனசமூக நிலையங்கள் அப்படியேதான் இருக்கின்றன, கோவில்கள் அப்படியேதான் இருக்கின்றது, மக்களின் வாழ்க்கை நிலையும் அப்படியே தான் இருக்கின்றது.

ஏனைய மாகாணங்களை பாருங்கள். அவர்கள் தம் மக்களுக்கான அபிவிருத்திகளை மிகத் திறமையாக முன்னெடுக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தை எடுத்துப் பார்த்தால் அவர்கள் மாகாணத்துக்கான அபிவிருத்திகளை மாகாணசபையின் ஊடாக எடுத்துக் கொண்டு உரிமைகளுக்காக பாராளுமன்றில் விவாதிக்கின்றார்கள்.

எனவே நாமும் எமது மக்களின் நலன்களுக்காக சிந்தித்து எமது யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி, இந்த பிரதேசத்தின் அபிவிருத்திகள், வாழ்வாதார முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு எமது அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

நாமும் ஏனைய மக்கள் பெறும் அனைத்து அபிவிருத்திகளையும் பெற்று வாழ்க்கை தரத்தில் உயர்ந்த நிலைக்கு வந்த பின்னர் எமக்கான உரிமைகளை கேட்கும் போது அவை நிச்சயம் கிடைக்கும். அத்தோடு அபிவிருத்தியும் ஒரு உரிமைதான் என்பதை யாரும் மறக்க கூடாது. எனவே மற்ற உரிமைகளை மட்டுமே கேட்டுக் கொண்டு இந்த அபிவிருத்தி உரிமையை நாம் விட்டு விட்டோம் என்றால் இன்னுமொரு 30 வருடங்களுக்கு மேலாக எமது மக்கள் இதே கஸ்டங்களைத்தான் அனுபவிக்க நேரிடும்.

நீங்கள் இன்று என்னிடம் உங்கள் பிரச்சனைகளை தெளிந்த மனதுடன் சொல்லியுள்ளீர்கள். நிச்சயமாக சொல்கின்றேன். உங்கள் பிரச்சனைகளை என்னால் தீர்த்து வைக்க முடியும். ஆவற்றை தீர்த்து வைக்கும் வரை நான் உங்களை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என உறுதிபட சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

கல்வி, விவசாயம், மீன்பிடி, இளைஞர்கள் என்ற நான்கு விடயங்களிலும் முழுமையான அபிவிருத்தியை ஏற்படுத்த என்னால் முடியும். எமது அபிவிருத்தியின் பங்காளர்களாக உங்களையும் என்னோடு இணைத்துக் கொண்டு பயணிக்கவே நான் விரும்புகின்றேன். எனவே எனக்கு ஒத்துழைப்பு தந்து, என்னை அங்கீகரித்து வடமாகாண சபைக்கு என்னை அனுப்பி வைப்பீர்களானால் நிச்சயமாக உங்களோடு இருந்து உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் என கூறிக்கொள்கின்றேன். என்றார்.

இச்சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த,

இப்பிரதேச மக்கள் தமது கல்வியில் காட்டும் ஆர்வமும், அக்கறையும் பாராட்டத்தக்கது. ஆனால் இவர்களுக்கான வளங்கள் இன்னும் வழங்கப்பட வேண்டும். இங்குள்ள பாடசாலையின் கட்டுமானங்கள், ஆசிரிய வளங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் நிச்சயமாக அங்கஜன் அவர்கள் கவனத்தில் எடுத்து தீர்த்து வைப்பார் என கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரெஜினோல்ட் குரே,

நாம் எல்லோரும் இலங்கை மக்கள் எங்களது கரங்கள் ஒன்றாக சேர வேண்டும். பௌத்த ஆலயங்களில் பிள்ளையார் உட்பட்ட இந்து கடவுள்கள் இருக்கின்றார்கள். தெய்வங்கள் ஒன்று சேரும்போது நாங்கள் ஏன் ஓன்று சேர மறுக்கின்றோம்.
இன்று நான் 13 வது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொள்ளும் ஒருவன் ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவனாக இருந்தாலும் கூட 13வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளிக்கின்றேன். உண்மையில் வெளியில் நின்று உரிமைகளை கேட்பதை விட உள்ளுக்குள் நின்று அவர்களுடன் போராடி உரிமையை கேட்டு பெற்றால் தான் வெற்றி கிடைக்கும் வெளியில் நின்று சண்டை போடுவதால் எந்த பயனும் இல்லை.

நான் யாழ்ப்பாணத்திற்கு நிறைய தடவைகள் வந்துள்ளேன். கடந்த தடவை வந்தபோது இடம்பெற்றிருந்த அபிவிருத்தியை விட இந்த முறை பார்க்கும் போது முன்னேற்றம் காணப்படுகின்றது. இவற்றிற்கு காரணம் அரசாங்கமே. எனவே அரசாங்கத்:துடன் இணைந்து அபிவிருத்;தியை முன்னெடுக்க வேண்டும் அதற்கு அங்கஜன் இரமாநாதனை நீங்கள் ஆதரிக்க வேண்டும். என கூறினார்

இச்சந்திப்பில் கலந்து கொண்ட கிராம மக்கள், தமது பிரச்சனைகளை அமைச்சர்களிடமும், அமைப்பாளரிடமும் முன்வைத்ததுடன், ஒரே தருணத்தில் இரண்டு அமைச்சர்களை சந்தித்தது பெருமையாக இருப்பதாகவும், இந்த சிறந்த சந்தர்ப்பத்தை உருவாக்கித் தந்த அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருந்தனர்.
தொடர்ந்து அயற் கிராமங்களான கலைமதி, பூமகள் கிராமங்களுக்கும் கிராம முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க அமைச்சர்கள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்ததுடன், மனுக்களையும் பெற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts