பிரதேசசபைத் தலைவர் மீது கடற்படையினர் தாக்குதல்

வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் மீது கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு 8.45 மணியளவில் கீரிமலை சேந்தான் குளம் பகுதியில் நடந்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வலி. வடக்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக் கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு சேந்தான்குளம் பகுதியிலுள் பற்றைகளை அழிப்பதற்கு பிரதேச சபைத் தலைவர் கடற்படை யினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெற்றுள்ளார்.

இந்நிலையில் சேந்தான்குளம் பகுதியில் நேற்று பற்றைகளை வெட்டி தீ வைத்து எரிக்கும் சிரமதான நடவடிக்கையில் வலி. வடக்கு பிரதேச சபையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்து அவ்விடத்திற்கு வந்த கடற்படையினர் சிரமதானப் பணியில் ஈடுபட்ட 5 பேர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இச் சம்பவத்தையறிந்து நேற்றி ரவு 8.45 மணியளவில் அவ் விடத்திற்கு சென்ற பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் கடற்படையினருடன் பேச முற்பட்டுள்ளார். எனினும் பிரதேச சபைத் தலைவர் மீதும் அவரு டன் சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்திய கடற்படையினர், அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் இள வாலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

Related Posts