பிரதி சபாநாயகர் திலங்க, குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம்!

8வது பாராளுமன்றின் பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கடந்த பாராளுமன்றில் ஈபிடிபி கட்சி எம்பியான சந்திரகுமாருக்கு இந்த பதவி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

திலங்க சுமதிபாலவின் பெயரை ரவுப் ஹக்கீமும் செல்வம் அடைக்களநாதனின் பெயரை சுமந்திரனும் முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாராளுமன்றின் ஆளும் கட்சி பிரதம கொரடாவாக கயந்த கருணாதிலகவும் அவை முதல்வராக லக்ஷமன் கிரியெல்லவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாராளுமன்றம் இன்று மாலை 3 மணிவரைக்கும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் கொள்கை தொடர்பில் உரை நிகழ்த்துவார்.

Related Posts