இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பிரதம நீதியரசரை பதவி நீக்குவதற்கு நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது.அதன்படி அங்கீகார ஆவணத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை கையெழுத்திட்டுள்ளார்.
இதனையடுத்து அது தொடர்பான அறிவித்தல் சிராணி பண்டாரநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த அறிவிப்பு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் சட்ட ஆலோசகர்கள் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் அமைப்பு தொடர்பான பிரச்சினைக்கு மத்தியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் வாரத்தில் பதில் பிரதம நீதியரசர் ஒருவரை நியமிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.அதற்கு அமைய பிரதம நீதியரசராக அரசாங்கத்துக்கு தற்போது விசுவாசமாக இருக்கும் சிராணி திலகவர்த்தன அல்லது முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
எனினும் சிராணிதிலகவர்த்தன மாத்திரமே பிரதம நீதியரசருக்கு எதிராக நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சாட்சியமளித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.