பிரதம அமைச்சர் அவர்கள் எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்தில் இணைந்துக் கொண்டார்

பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பெலியத்தை அபிநவாராமை விகாரையில் நேற்று (2020.04.15) எண்ணெய் தேய்க்கும் சம்பிரதாயத்தில் இணைந்துக் கொண்டார்.

முற்பகல் 09.17 எனும் எண்ணெய் தேய்ப்பதற்கான சுபநேரத்தில் அபிநவாராமாதிபதி போலானே ஆனந்ததேரர் அவர்களினால் பிரதம அமைச்சர் அவர்களுக்கு சம்பிரதாயப்படி எண்ணெய் தேய்க்கப்பட்டது.

சுகாதார அறிவுறுத்தல்களைக் கடைபிடித்து இந்த நிகழ்வில் ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், லிமினி வீரசிங்க ராஜபக்ஷ ஆகியோர் இணைந்துக் கொண்டனர்.

அதன் பின்பு, பிரதம அமைச்சர் அவர்கள் விகாரையில் சமய வழிபாடுகளிலும் கலந்துக்கொண்டார்.

Related Posts