பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் : மஹிந்த ராஜபக்ஷ

ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நேற்றய தினம் வியாழக்கிழமை ஶ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்:-

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் “பொக்கட்” தான் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன். ரணில் எதை விரும்புகின்றாரோ அதையே சம்பந்தன் செய்வார்.

நாட்டில் ஏற்பட்டு உள்ள இனபிரச்சனையை தீர்ப்பதற்கு என்னுடன் பேச வாருங்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பலமுறை அழைப்பு விடுத்திருந்தேன். அவர்களும் வருகின்றோம் வருகின்றோம் என கூறி இறுதிவரை வரவில்லை.

எதிர்க்கட்சியாக உள்ளதாக கூறிக்கொள்ளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக செயற்படவில்லை. அரசின் பங்காளி கட்சியாகவே செயற்படுகின்றது. எனவும் தெரிவித்தார்.

Related Posts