பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ரஜினிகாந்த் வரவேற்பு

நேற்று இரவு 12 மணி முதல் ரூ. 500, 1000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகிறது என்று பிரதமர் மோடி அறிவித்து உள்ளார். புதியதாக புது வடிவத்துடன் ரூ. 2,000 மற்றும் 500 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளது.

மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கைக்கு வரவேற்பு, எதிர்ப்பு என இரண்டும் வந்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்றுள்ளார்.

மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தனது நடவடிக்கையை மோடி வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைக்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். புதிய இந்தியா பிறந்துள்ளதாக டுவிட்டரில் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Posts