பிரதமரான பிறகு முதல் முறையாக சென்னை வருகிறார் நரேந்திர மோடி!

பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வரும் 29-ம் தேதி சென்னைக்கு வருகிறார் நரேந்திர மோடி. இதற்காக விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 29-ந் தேதி பகல் 1 மணிக்கு டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை புறப்படும் மோடி, மாலை 3.30 மணிக்கு தனி விமானத்தில் மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சேருகிறார். அங்கு அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கின்றனர்.

modi

மாலை 3.45 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி தனி ஹெலிகாப்டரில் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு புறப்பட்டு செல்கிறார். இரவு ஸ்ரீஹரிகோட்டாவிலேயே தங்குகிறார். ஸ்ரீஹரிகோட்டா 30-ந் தேதி (திங்கட்கிழமை) ஸ்ரீஹரிகோட்டாவில் பி.எஸ்.எல்.வி. சி-23 ராக்கெட் காலை 9.43 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார்.

பின்னர் காலை 11 மணிக்கு ஹெலிகாப்டரில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்து சேருகிறார். பின்னர் விமான நிலையத்தில் பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் டெல்லிக்கு வழியனுப்பி வைக்கப்படுகிறார்.

காலை 11.15 மணிக்கு தனி விமானத்தில் பிரதமர் நரேந்திரமோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார்.

நரேந்திரமோடி வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மோடியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்க டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் சென்னை வந்துள்ளனர்.

Related Posts