நடைபெற்றுவரும் பங்களாதேஷ் அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில், இரட்டை சதம் அடித்ததன் மூலம், இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
239 பந்துகளில் 24 பவுண்டரிகளுடன் இரட்டை சதத்தை எட்டிய விராட் கோஹ்லி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 தொடர்களில் இரட்டைச் சதம் அடித்த ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னதாக, கோஹ்லி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 200 ஓட்டங்களும், நியூசிலாந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக 211 ஓட்டங்களையும், இங்கிலாந்து அணிக்கெதிராக 235 ஓட்டங்களையும் பெற்றுள்ளார். நேற்றய போட்டியில் கோஹ்லி 204 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
கிரிக்கெட்டின் கடவுளாக வர்ணிக்கப்படும் அவுஸ்ரேலிய அணியின் ஜாம்பவான் டொன் பிரட்மன் மூன்று இரட்டை சதங்களையும், இந்திய அணியின் நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட் இரண்டு இரட்டை சதங்களும் அடித்ததே இதற்கு முன்னதாக சாதனையாக இருந்தது.
ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியின், இரண்டாவது நாள் ஆட்டமான நேற்று (வெள்ளிக்கிழமை) இந்திய அணி முதல் இன்னிங்ஸிற்காக 6 விக்கெட் இழப்புக்கு 687 ஒட்டங்களை பெற்றிருந்த நிலையில், பங்களாதேஷ் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது. தற்போது பங்களாதேஷ் அணி தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.