பிரசன்ன ரணவீர மற்றும் பாலித்த தேவரப்பெரும ஆகியோரது பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்கு தடை செய்ய, தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை கூடிய சபையில் சபாநாயகரால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைய, நாளை முதல் ஒரு வார காலத்துக்கு பாராளுமன்ற நடவடிக்கைகளில் குறித்த இருவரும் ஈடுபட முடியாது.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.