வரவு – செலவுத் திட்டத்தில் பியர் விலையைக் குறைப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனையில் எந்தவித மாற்றமும் செய்யப்படமாட்டாது என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மதுபானங்களில் உள்ள மதுசாரத்தின் அளவுக்கு அமைய வரி விதிப்பது என்பது சர்வதேசத்தால் பின்பற்றப்படும் முறை என்றும், அதன் ஊடாக அரச வரி வருமானத்தை பலமானதாக மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு – செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் பகிரங்க எதிர்ப்பை வெளியிடப்பட்ட நிலையில், தனது தீர்மானத்தில் எந்தவொரு மாற்றமும் ஏற்படுத்தப்படமாட்டாது என, நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.