பிப்ரவரி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை நேற்று. இந்த நாளில் 5 புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் நடித்த காக்கிச் சட்டைதான் இவற்றில் பெரிய படம். மற்றவை கிடைத்த இடைவெளியில் வெளியானால் போதும் என்று ரிலீஸ் ஆகியிருக்கின்றன.
டாணா என்ற தலைப்புடன் ஆரம்பமான படம் இது. பின்னர் சத்யா மூவீசுக்கு பணம் கொடுத்து, காக்கிச் சட்டை தலைப்பை வாங்கினர். துரை செந்தில் குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாத ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.
வஜ்ரம்
பசங்க படத்தில் நடித்த (இப்போது வளர்ந்த) சிறுவர்களை வைத்து, எஸ் டி ரமேஷ் செல்வன் இயக்கியுள்ள படம் வஜ்ரம்.
எட்டுத் திக்கும் மதயானை
ராட்டினம் படம் இயக்கிய தங்கசாமியின் இரண்டாவது படம் இந்த எட்டுத் திக்கும் மதயானை. நீண்ட தாமதத்துக்குப் பிறகு வெளியாகியுள்ளது. ஆர்யாவின் தம்பி சத்யா, ஸ்ரீமுகி நடித்துள்ளார். மனுரமேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மணல் நகரம்
எம் ஐ வசந்த குமார் தயாரிப்பில் துபாயை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் மணல் நகரம். ஒருதலை ராகம் சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதோடு, படத்தை இயக்கியும் உள்ளார். பிரஜினி, தனிஷ்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இரவும் பகலும்
இந்தப் படத்தை ஏ.தணிகைவேல் வழங்க ஸ்கை டாட்ஸ் பிக்சர்ஸ் சார்பாக பாலசுப்பிரமணியம் பெரியசாமி தயாரித்துள்ளார். இயக்கம் பால ஸ்ரீராம். அங்காடித்தெரு மகேஷ், அனன்யா, ஏ.வெங்கடேஷ், ஜெகன் உள்பட பலர் நடித்துள்ளனர்.