பித்துக்குளி முருகதாஸ் காலமானார்

பக்திப்பாடகர் பித்துக்குளி முருகதாஸ்(95) சென்னையில் காலமானார்.

singer-pithukuli-murugadas

பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட இவர் கோவையில் 1920ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி சுந்தரம் ஐயர், அலமேலு தம்பதியருக்கு மகனாக தைப்பூச திருநாளில் பிறந்தார்.

தென்னாப்ரிக்கா, இலங்கை, அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இசைக்கச்சேரி நடத்தியுள்ளார் தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள இவர் திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார்.

தியாகராஜர் விருது, கலைமாமணி, சங்கீத சாம்ராட், தியாகராஜர் விருது உள்பட பல இசை விருதுகளை பித்துக்குளி முருகதாஸ் பெற்றுள்ளார்.

தைப்பூச திருநாளில் பிறந்த இவர் கந்த சஷ்டி திருநாளில் காலமானமை குறிப்பிடத்தக்கது.

Related Posts