பிணை வழங்கிய பின்னும் தொடர்கிறது உண்ணாவிரதம் ; 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி

தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு நேற்று கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கியுள்ள நிலையிலும் பொது மன்னிப்பு கோரிய அரசியல் கைதிகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 5ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவரும் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளில் 7 பேர் மயக்கமுற்ற நிலையில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தங்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் வரை இப்போராட்டம் தொடரும் என்றும் விடுதலைக்கான தங்களது போராட்டத்திற்கு உள்நாட்டிலும், புலம்பெயர் நாடுகளிலும் வாழ்கின்ற உறவுகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts