பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் முன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் ஆஜராகத் தவறியதையடுத்து, ஞானசார தேரரை கைது செய்வதற்கு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்தார்.
நீதிமன்றத்தை அவமதித்ததாக ஞானசார தேரர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதேவேளை, தேசிய பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரரை மிரட்டியமை மற்றும் குரானை அவமதித்ததாக கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பிலும் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களை கூறி ஞானசார தேரர் நீதிமன்றத்திற்கு சமூகமளித்திருக்கவில்லை.
எனினும் ஞானசார தேரர் இந்த வழக்கில் முன்னிலையாகாமை காரணமாக கடந்த 15 ஆம் திகதி அவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.