பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 37பேர் யாழில் கைது

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 37பேர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.மேலும் சட்டவிரோத மது உற்பத்தி செய்த நபர் ஒருவரும், கஞ்சா போதைப் பொருள் வைத்திருந்த இரண்டு பேரும், பொது இடத்தில் மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக 4 பேரும், சூழல் மாசுபடுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட 18 பேரும் யாழ்ப்பாணப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுமதியில்லாமல் மாட்டிறைச்சி வெட்டிய குற்றத்திற்காக இரண்டு பேர் அச்சுவேலிப் பொலிஸாரினாலும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 5பேர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Related Posts