பிக் பாஸ் நிகழ்ச்சியை தமிழில் நடத்துகிறேன்: கமல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் உலக நாயகன் கமல் ஹாசன். அவர் தற்போது `சபாஷ் நாயுடு’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர, சிக்கலில் இருந்த `விஸ்வரூபம்’ படத்தின் இரண்டாவது பாகத்தை வெளியிடவும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டு வருகிறார். இப்படமும் இந்த ஆண்டு வெளியாகும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய முயற்சி ஒன்றையும் மேற்கொள்ள இருக்கிறார். இந்தியில் பிரபலமான “பிக் பாஸ்” என்ற நிகழ்ச்சியை பாலிவுட் சூப்பர்ஸ்டார் சல்மான் கான் நடத்தி வருகிறார். அந்த “பிக் பாஸ்” நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை கமல் தொகுத்து வழங்க உள்ளதாக அவரே அதனை உறுதிப்படுத்தி உள்ளார். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில், அதனை கமல் ஏற்றுக்கொண்டுள்ளது அவரது ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

இதுகுறித்து கமல் தெரிவித்ததாவது,

ஒரு பொழுதுபோக்காளராக பல்வேறு முயற்சிகளை பல்வேறு விதமாக வெளிப்படுத்தி இருக்கிறேன். ஆனால் இதுவரை எந்த தொலைக்காட்சி தொடரையோ, நிகழ்ச்சியையோ நான் தொகுத்தளிக்கவில்லை. மேலும் எந்த வித ரியாலிட்டி ஷோவிலும் நான் கலந்து கொள்ளவில்லை. எந்த நிகழ்ச்சி பற்றியும் எனக்கு அனுபவம் இல்லாததால், பிக் பாஸ் நிகழ்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்று கூறினார்.

Related Posts