ஆச்சிரமமொன்றில் இணைக்கப்பட்ட 7 வயதுடைய முஸ்லிம் சிறுவனொருவன், பௌத்த பிக்குவாக மாறிய சம்பவமொன்று, திம்புலாகல வன ஆச்சிரமத்தில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து திம்புலாகல வன ஆச்சிரமத்தின் தலைமைத் தேரர் மிலானே சிறியலங்காரர் கூறியதாவது,
“குறித்த சிறுவனின் தாய், வெளிநாடொன்றில் பணிபெண்ணாக தொழில் புரிந்துவரும் நிலையில், சிறுவனின் தந்தையான ஹமீட் ஸ்மைல், தனது மகனை இந்த ஆச்சிரமத்தில் கொண்டு வந்துச் சேர்த்தார்.
இந்நிலையில், குறித்த மாணவன், பௌத்த மதத்தைத் தழுவி, தற்போது இரத்தினபுரி சிறி சுதர்சனலங்கார என்ற பெயரில் தேரராக திருலைப்படுத்தப்பட்டு, சிங்கள, தமிழ் மற்றும் பௌத்தத்தை கற்கும் சிறுவர்களுடன், குறித்த ஆச்சிரமத்தில் வாழ்ந்து வருகின்றார்” எனக் கூறினார்.